உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம் சுவை பார்த்த கலெக்டர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபு சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று, அவர் திருவள்ளூர் நகராட்சி, சத்தியமூர்த்தி தெருவில், உள்ள, நகராட்சி தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, மாணவர்களுடன் உணவு அருந்தினார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறிபோது, மாணவ, மாணவியருடன் சேர்ந்து காலை உணவருந்தி, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுகபுத்திரா, ஆர்.டி.ஓ., ஜெயராஜ பவுலின் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்