உள்ளூர் செய்திகள்

ஜாக்டோ ஜியோ போராட்டம் டி.ஏ.டி.எப்., சங்கம் பங்கேற்பு

மதுரை: தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை (டி.ஏ.டி.எப்.,) தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:தி.மு.க., தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ இன்று மாவட்ட தலைநகர்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.இணையவழியில் நடந்த மாநில அவசர சிறப்பு செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் டி.ஏ.டி.எப்., ஆசிரியர்களும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். பொதுச் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் நல்லதம்பி, மகளிரணி செயலாளர் சகாய தனமாலினி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்