வெற்றிக்கு விடாமுயற்சியே வழி இஸ்ரோ விஞ்ஞானி அறிவுரை
கோவை: கோவை கே.பி.ஆர்., தொழில்நுட்ப கல்லுாரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தலைமை விருந்தினராக அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் பேசுகையில், சந்திரயான் முதல் திட்டத்தில் ஏற்பட்ட தோல்விகள் வாயிலாகதான், என்ன தவறுகளை செய்தோம் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சந்திராயன் 3 திட்டத்தில் அவற்றையெல்லாம் சரி செய்து, மேம்படுத்த முடிந்தது. தோல்வியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக கருத வேண்டும். ஒருவருக்கு விடாமுயற்சி தனிப்பட்ட வாழ்க்கையிலும், கல்வியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, என்றார்.விழாவில், கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் நடராஜ், முதல்வர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.