தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
நிகழ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை வரும் (நவ.,12)ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், மறுநாள் நவ.,13ம் தேதி திங்கள் கிழமை வழக்கம் போல் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படும் சூழல் உருவானது.நவ.,13ம் தேதி திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வருக்கு தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு மறுநாள் (நவ.,13) விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதில் நவம்பர் 18ம் தேதி வேலை நாள் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.