உள்ளூர் செய்திகள்

எஸ்.ஐ., மறுதேர்வு நடத்தும் பொறுப்பு தேர்வாணையத்திடம் ஒப்படைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில், 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்தும் பொறுப்பை, கர்நாடகா தேர்வு ஆணையத்திடம், மாநில அரசு ஒப்படைத்து உள்ளது.கர்நாடகாவில் 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு, கடந்த 2021 ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வை முறைகேடு செய்து, தேர்வர்கள் எழுதி இருந்தனர். இதுகுறித்து விசாரித்த சி.ஐ.டி., போலீசார், ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., அம்ருத்பால், சமாஜ்வாதி பிரமுகர் ஆர்.டி., பாட்டீல் உட்பட பலரை கைது செய்தனர்.அப்போதைய உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா, மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனை எதிர்த்து தேர்வர்கள் சிலர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தனியார் அமைப்பு மூலம் மறுதேர்வு நடத்த கடந்த 10ம் தேதி, நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் மறுதேர்வு நடத்தும் பொறுப்பை, கர்நாடகா தேர்வு ஆணையத்திடம் ஒப்படைத்து, மாநில அரசின் உள்துறை நேற்று உத்தரவிட்டது. கர்நாடக மின்வாரியம்; பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்; பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக கழகம் மற்றும், பல்வேறு வாரியங்களின் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி இருப்பதால், தேர்வை நடத்தும் பொறுப்பை, கர்நாடகா தேர்வு ஆணையத்திடம், ஒப்படைத்து இருப்பதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்