அண்ணா பல்கலை., தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களிடம் தேர்வு எழுதுதல் மதிப்பெண் பெறுதல் போன்றவற்றுக்கு 10 ஆண்டுகளாக ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.தற்போது பல்கலையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டு நிதிக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்துள்ளது.கட்டண உயர்வு நிறுத்தப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட செமஸ்டர் தேர்வுக் கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். மேலும் அவர், அடுத்த செமஸ்டரில் இருந்து தேர்வுக் கட்டணத்தை உயர்த்த அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கூடுதலாக செமஸ்டர் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அதை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம், என்றார்.