உள்ளூர் செய்திகள்

பெரியார் பல்கலை ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறையில் கருத்தரங்கு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கில துறையின் என்லிட்ரசியா இலக்கிய மன்றம் சார்பாக, இலக்கியத்தில் நீதிநெறி என்ற கருத்தரங்கு நடந்தது.ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கோவிந்தராஜ் பேசினார். முனைவர் கிருத்திகா வாழ்த்தி பேசினார். முன்னதாக முதலாமாண்டு மாணவி பூஜாஸ்ரீ வரவேற்றார். மாணவி ரித்திகா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.இதில் வேலுார் திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், இலக்கியத்தில் இருக்கக்கூடிய எண்ணிலடங்கா நீதிநெறிகள் பற்றியும், அவை எழுத்தாளர்களால் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் விரிவாக பேசினார். மேலும் மாணவர்கள் எழுப்பிய, பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கமளித்தார்.தொடர்ந்து ஆங்கில இலக்கிய மன்றத்தின் இந்த ஆண்டிற்கான தலைவராக தாமரைச்செல்வன், துணைத் தலைவராக கயல்விழி, செயலாளராக ரூபினி, பொருளாளராக ரித்திகா, உறுப்பினர்களாக நிவேதிதா, கோகுல் செல்வம் மற்றும் அஸ்வினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்