உள்ளூர் செய்திகள்

இந்திய சர்வதேச சுற்றுலா கண்காட்சி நாளை துவக்கம்

மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இந்திய சர்வதேச சுற்றுலா கண்காட்சி (ஐ.ஐ.டி.இ.,) டிச.8 முதல் 10 வரை 3 நாட்கள் நடக்கிறது.ஐ.ஐ.டி.இ., இயக்குனர் அனுராக்குப்தா கூறியதாவது: பயணக்கண்காட்சியில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேச மாநில சுற்றுலா துறைகள், ஜி.ஆர்.டி., ஓட்டல்கள், லெட்ஸ் கோ சுவிட்சர்லாந்து, பரோன் குரூப் ஊட்டி, டி.எஸ்.எப்., கிராண்ட், ஹிமாலயன் கிளாசிக், டிராவல் மூன் போன்ற சுற்றுலா முகவர்கள், ஓட்டல்கள், ரிசார்ட்கள் பற்றி காட்சிப்படுத்தப்படும்.பல்வேறு மாநிலங்களின் சுற்றுலா பேக்கேஜ்கள், சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து, பாலி, ஐரோப்பா, அஜர்பைஜான், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கென்யா போன்ற வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ் பற்றியும் காட்சிப் படுத்தப்படும். பண்டிகை காலம், வார இறுதி, தேனிலவு, வணிகப் பயணங்களுக்கும் இதுஉதவும். கண்காட்சி நேரம் காலை 11: 00 முதல் இரவு 7:00 மணி வரை. அனுமதி இலவசம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்