உள்ளூர் செய்திகள்

ராமகிருஷ்ணா - சிறுதுளி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுார் மற்றும் சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்கான நிகழ்ச்சி, சுங்கம் பை-பாஸ் ரோட்டில் உள்ள, சிறுதுளி நொய்யல் வாழ்வியல் மையத்தில் நடந்தது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவகுமார் கூறுகையில், ஒப்பந்தம் வாயிலாக கல்லுாரி சமூகப்பணியியல் துறை மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு கல்வி கற்பிக்கப்படும். இயற்கை பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும், என்றார்.கல்லுாரி சமூகப்பணியியல் துறை தலைவர் பிரியதர்ஷினி, சிறுதுளி தலைமை ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்