உறைவிட பள்ளி கட்டடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
கோலார்: கோலார் மாவட்டம், மாலுார் யலுவஹள்ளி மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளி மாணவர்கள் நலனுக்காக எட்டு கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டது.மாலுாரின் யலுவஹள்ளி மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில், செப்டிக் டேங்கை மாணவர்கள் சுத்தம் செய்ய வைத்த கொடுமை நடந்த பின், சமூக வலைதளங்களில் பரவியது. இச்சம்பவத்தை மத்திய சமூக நலத் துறை இணையமைச்சர் நாராயணசாமி கடுமையாக கண்டித்தார். நீதிபதிகள் உறைவிட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இச்சம்பவம் தொடர்பாக உறைவிட பள்ளி முதல்வர், வார்டன், ஆசிரியர்கள் என நான்கு பேர் சஸ்பெண்ட் செயயப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா, கோலார் மாவட்ட சமூகநலத்துறை ஆணையர் ராகேஷ் குமார் சர்மா ஆகியோரும் நேற்று முன் தினம் அப்பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.நான்கு மாதங்களில் வழங்கப் பட்ட உணவுப் பொருட்களின் விபரங்களை ஆய்வு செய்தார். இது குறித்து அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரித்தார். பள்ளியில் எட்டு கண்காணிப்பு கேமராக்களை அமைக்க நடவடிக்கை எடுத்தார். மாணவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.பின்னர் அவர் கூறுகையில், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களிலும் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு செய்யப் படும், என்றார். மாலுார் யலுவஹள்ளி சம்பவத்தை தொடர்ந்து கோலார் மாவட்டத்தில் உள்ள மற்ற உறைவிட பள்ளிகள் கண்காணிக்கப்படுகிறது.