உள்ளூர் செய்திகள்

பெங்களூரில் இன்று முதல் சர்வதேச சிறுதானிய மேளா

பெங்களூரு: பெங்களூரின் அரண்மனை மைதானத்தில், இன்று முதல் மூன்று நாட்கள் சிறு தானிய மேளா நடக்கவுள்ளது. இதுகுறித்து, விவசாயத்துறை வெளியிட்ட அறிக்கை:கர்நாடக விவசாயத்துறை, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில், பெங்களூரின் அரண்மனை மைதானத்தில், இன்று முதல் நாட்கள், சர்வதேச அளவிலான சிறு தானிய மேளா நடக்க உள்ளது.முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பர். தமிழகம், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, மஹாராஷ்டிரா, ஒடிசா, மேகாலயா என, பல்வேறு மாநிலங்கள் பங்கேற்கின்றன. 300 கடைகள் திறக்கப்படும்.நாடு, வெளிநாடுகளின் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தானியங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும். ஜெர்மன், சவுதி அரேபியா, ஓமன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளும் பங்கேற்கின்றன. விவசாயிகளுக்காக கருத்தரங்கு நடத்தப்படுகிறது.மேளாவில் பத்துக்கும் மேற்பட்ட, சிறு தானிய உணவுகள் இடம் பெற்று உள்ள ஹோட்டல்கள் இருக்கும். இவற்றில் விதவிதமான சுவையான சிறுதானிய உணவு, சிற்றுண்டி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்