உள்ளூர் செய்திகள்

பெண் குழந்தை முக்கியத்துவம் கையெழுத்து இயக்கம் துவக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், பெண்குழந்தைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கலெக்டர் ராகுல்நாத், கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.செங்கல்பட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், கடந்த 19ம் தேதியில் துவங்கி நாளை வரை, தேசிய பெண் குழந்தைகள் வாரம் கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில், பெண் குழந்தைகளின் கல்வி, உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உறுதிமொழி ஏற்று, கலெக்டர் ராகுல்நாத் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்