அறிவோம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்
முக்கியத்துவம்மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ், 1965ம் ஆண்டு புதுடில்லியில் ஐ.ஐ.எம்.சி., நிறுவனம் துவக்கப்பட்டது. மத்திய தகவல் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், தொடர்ந்து பல வளர்ச்சிகளைக் கண்டு, தற்போதைய நவீன தகவல் தொடர்பிற்கு ஏற்ப பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது.வளாகங்கள்: புதுடில்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இக்கல்வி நிறுவனத்திற்கு ஒடிசா, மிசோரம், மகாராஷ்ட்டிரா, ஜம்மு, கேரளா ஆகிய மாநிலங்களில் கல்வி வளாகங்கள் உள்ளன. வழங்கப்படும் முதுநிலை படிப்புகள்: பி.ஜி., டிப்ளமா இன் ஜர்னலிசம் - ஆங்கிலம், ஹிந்தி, ஒடியா, மராத்தி, மலையாளம் மற்றும் உருதுபி.ஜி., டிப்ளமா இன் ரேடியோ மற்றும் டிவி ஜர்னலிசம் - ஆங்கிலம் மற்றும் ஹிந்திபி.ஜி., டிப்ளமா இன் அட்வர்டைசிங் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஸ் - ஆங்கிலம் மற்றும் ஹிந்திபி.ஜி., டிப்ளமா இன் டிஜிட்டல் மீடியாதகுதிகள்: அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு இந்திய கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி பிரிவினர் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சேர்க்கை முறை: தேசிய தேர்வு முகமை நடத்தும் சி.யு.இ.டி., - பி.ஜி., எனும் முதுநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு https://pgcuet.samarth.ac.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பு: ஜர்னலிசம் துறையில் ஒடியா, மராத்தி, மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் வழங்கப்படும் பி.ஜி., டிப்ளமா படிப்பிற்கு பிரத்யேகமாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 24விபரங்களுக்கு: இணையதளம்: http://iimc.nic.in/தொலைபேசி: 011 - 26742920, 26742940, 26742960