உள்ளூர் செய்திகள்

பதிவாளர் நியமன விவகாரம் பேராசிரியர் சங்கம் கோரிக்கை

சென்னை: வெளிப்படையாக விண்ணப்பங்கள் பெற்று, தகுதியானவரை பதிவாளராக நியமிக்க வேண்டும் என அண்ணா பல்கலை பேராசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து, அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு, பல்கலை ஆசிரியர் சங்கமான, ஏ.யு.டி.ஏ., எழுதியுள்ள கடிதம்:அண்ணா பல்கலையின் பொறுப்பு பதிவாளராக உள்ள பிரகாஷ், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியின் முதல்வராக பணியாற்றுகிறார். ஒரு பேராசிரியர், இரண்டு நிர்வாக பதவிகளை வகிக்கின்றார். இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.வேறு எந்த பேராசிரியருக்கும், பதிவாளர் என்ற நிர்வாக பதவி வகிக்க தகுதி இல்லை என்பது போன்ற தோற்றத்தை, பல்கலையின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் பொறுப்பு வகிக்கும் பிரகாஷை முழுநேர பதிவாளராக நியமிப்பதற்கான தீர்மானத்தை, சமீபத்திய சிண்டிகேட் கூட்டத்தில் நிராகரித்துள்ளனர்; அதற்கு நன்றி.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.சி.டி.இ., விதிகளை, அண்ணா பல்கலை பின்பற்ற வேண்டும். எனவே, பதிவாளர் பதவிக்கு வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டு, தகுதியானவர்களிடம் விண்ணப்பம் பெற வேண்டும்.அரசு மற்றும் பல்கலை சிண்டிகேட் சார்பில் குழு அமைத்து, தகுதியான ஒருவரை பதிவாளராக தேர்வு செய்ய வேண்டும். கூடுதல் பொறுப்பில் உள்ள பிரகாஷை, எம்.ஐ.டி., கல்லுாரி முதல்வர் பொறுப்பை மட்டும் பார்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்