உள்ளூர் செய்திகள்

தொலைதுார கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கடலுார்: கடலுாரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதுாரக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை துவக்க விழா நடந்தது.கடலுார், புதுப்பாளையத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைநிலை மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தில் 2023-24ம் காலாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவக்க விழா நடந்தது. மைய அலுவலர் (பொறுப்பு) சுதா, மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கி துவக்கி வைத்தார்.இதில் முதுகலை, வணிக நிர்வாகம், கணினி, வணிகவியல், கலைஅறிவியல் மற்றும் இசை படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் கல்வி உள்ளிட்ட செமஸ்டர் மற்றும் முழுஆண்டு படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் மற்றும் மாணவர் சேர்க்கை நடந்தது. நிகழ்ச்சியில், தொடர்பு அலுவலர், தனி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்