சென்னை ஐஐடியில் விளையாட்டுக்கான இளங்கலைப் படிப்பு அறிமுகம்
சென்னை: இந்தியாவில் உள்ள ஐஐடி-க்களில் முதன்முறையாக சென்னை ஐஐடியில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்காக விளையாட்டுக்கான இளங்கலைப் படிப்பை இந்த ஆண்டு (2024-25) அறிமுகம் செய்கிறது.சென்னை ஐஐடியின் இயக்குனர், பேராசிரியர் காமக்கோடி கூறுகையில், இந்த கல்வி ஆண்டு முதல் திறமையான விளையாட்டு மாணவர்களுக்கான விளையாட்டுப் படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் மேம்பட்ட உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறோம். ஜூலை 2024 முதல் விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை தொடங்குகிறது, என்றார். இத்திட்டத்தின் மூலம் மாணவர் சேர்க்கைக்குத் தகுதி பெற விண்ணப்பதாரர்கள் ஜேஇஇ (அட்வான்ஸ்டு)ன் பொதுத் தரவரிசைப் பட்டியல் (சிஆர்எல்) அல்லது பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற தேசிய/சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒரு பதக்கத்தையாவது வென்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட விளையாட்டுகளைக் கொண்ட பட்டியலில் விண்ணப்பதாரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தனி விளையாட்டுத் தரவரிசைப்பட்டியல் (எஸ்ஆர்எல்) தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கைக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.மேலும் விபரங்களுக்கு https://jeeadv.iitm.ac.in/sea/