உள்ளூர் செய்திகள்

தேர்வு அறைக்கு அலைபேசியுடன் சென்றால் கடும் நடவடிக்கை

தேனி: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது.தேனி முத்துத்தேவன்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணிபுரிய உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தது. மாவட்ட தேர்வுகள் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பள்ளிகல்வித்துறை துணை இயக்குனர் சின்னராஜூ தலைமை வகித்தார். தேர்வுகள் துறை உதவி இயக்குனர் குமார், சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா முன்னிலை வகித்தனர். வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல் உள்ளிட்டவை பற்றி பயிற்சி வழங்கப்பட்டது. கூட்டத்தில் அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைக்குள் அலைபேசி கொண்டு செல்ல கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அலைபேசி மற்றும் தேர்வுக்கு தொடர்பு இல்லாத பொருட்கள் கொண்டு வந்தால் உடனே தகவல் அளிக்க கூறினர். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். பிளஸ் 2 தேர்விற்காக 54 தேர்வு மையங்களில் நிரந்தர பறக்கும்படை அதிகாரிகளும், 50 ஆசிரியர்களை உள்ளடக்கிய 20 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்