உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா

புதுச்சேரி: புதுச்சேரி பிர்லியன்ட் இன்ஸ்டியூட் பயிற்சி மையத்தில் அசிஸ்டன்ட் பணிக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது.லாஸ்பேட்டை சபரி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் பி.ஐ.எம்., பிர்லியன்ட் இன்ஸ்டியூட், புதுச்சேரி அரசு நடத்தும் அரசுப்பணிக்கான போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.அதன்படி புதுச்சேரி அரசு நடத்தவிருக்கும் அசிஸ்டன்ட் தேர்வினை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.விழாவில், பிர்லியன்ட் இன்ஸ்டியூட் இயக்குனர்கள் நெடுஞ்செழியன், ஸ்ரீதரன், நிறுவனத்தின் ஆசிரியர்கள் அசிஸ்டன்ட் தேர்வின் பாடத்திட்டங்கள், பாடத்திட்டங்களை அணுகும் முறை மற்றும் தேர்வி வெற்றிகரமாக எழுதுவது விளக்கினர்.நிறுவன இயக்குனர்கள் கூறுகையில், பயிற்சி வகுப்புகள் காலை, மாலை மற்றும் வார இறுதி நாட்களில் நடத்தப்படும். நேரடியாக பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெற வாய்ப்பு இல்லாத காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சார்ந்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இங்கு பயின்று 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் யூ.டி.சி., எல்.டி.சி., தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் மே 5ம் தேதி முதல் துவங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்