உள்ளூர் செய்திகள்

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு முகாம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம் நடந்தது.வாணாபுரம் அடுத்த அரியலுாரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சண்முகம் வரவேற்றார்.முகாமில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும், தேர்தலில் ஓட்டளிப்பது நமது கடமை, வாக்காளர் உரிமைகள் குறித்து விளக்கிகப்பட்டது. மேலும் , நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தங்கள் பகுதியில் உள்ள அனைவரையும் ஓட்டளிக்க மாணவர்கள் அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மேலும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை காட்சிப்படுத்தி, ஓட்டளிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம் மற்றும் உறுதிமொழியேற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்