உள்ளூர் செய்திகள்

மெட்ராஸ் மெஷின் டூல்ஸ் கண்காட்சி நாளை துவக்கம்

சென்னை: மெட்ராஸ் மெஷின் டூல்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கம், 'ஐ.எம்.டி.ஓ.எப் 2024' எனப்படும் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் இம்மாதம், 18ம் தேதி முதல், 23ம் தேதி வரை நடத்துகிறது.இது, இயந்திர கருவிகள் துறையில் சமீபத்திய முன்னேற்றங்களை ஆராய, தொழில் வல்லுனர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு இணையற்ற தளமாக இருக்கும். ஐ.எம்.டி.ஓ.எப்., 2024, சர்வதேச உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிநவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் விரிவான கண்காட்சியாக இருக்கும்.புதுமை மற்றும் சிறப்பை மையமாக கொண்டு, மெஷினிங் சென்டர், டிரில்லிங் மெஷின்ஸ், கிரைண்டிங் மெஷின்ஸ் உட்பட பல்வேறு வகைகளில் தங்கள் புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் தீர்வுகளை கண்காட்சியாளர்கள் வெளியிடுவர்.இதுகுறித்து, சங்க தலைவர் டி.வினோத்பாபு கூறுகையில், ஐ.எப்.டி.ஓ.எப்., 2024க்கு தொழில் மற்றும் பங்குதாரர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்; இந்த கண்காட்சி பதிப்பு அறிவு பரிமாற்றம், நெட்வொர்க்கிங், வாய்ப்புகளுக்கான மையமாக செயல்படும். இயந்திர கருவிகள் துறையில் ஒத்துழைப்பு, வளர்ச்சியை எளிதாக்குகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்