உள்ளூர் செய்திகள்

விடுமுறையில் அரசு பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

உடுமலை: அரசு பள்ளிகளில், விடுமுறை நாட்களில் கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு, உள்ளாட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை கோட்டத்தில், 200க்கும் அதிகமான அரசுப்பள்ளிகள் உள்ளன. உடுமலை நகரம் தவிர, 90 சதவீத அரசுப்பள்ளிகள் கிராமப்பகுதிகளில் தான் உள்ளன. பல பகுதிகளில், அரசு பள்ளிகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. மிக சில பள்ளிகளில் மட்டுமே, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.விடுமுறை நாட்களில் குடிகாரர்கள் பள்ளி வளாகத்தில் நுழைவதும், கட்டமைப்புகளை சேதப்படுத்தும் புகார்களும் கிராமப்பகுதிகள் அதிகம் நடக்கின்றன. தற்போது அரசு பள்ளிகளில், விலை மதிப்புள்ள தொழில்நுட்ப சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் பாதுகாப்பு அவசியமாகிறது.மேலும், நாளை முதல் முழு ஆண்டு தேர்வு விடுமுறை துவங்குவதால், பள்ளிகளின் நிலையை பாதுகாப்பது குறித்து, ஆசிரியர்கள் நிம்மதி இழந்துள்ளனர். உள்ளாட்சி நிர்வாகத்தினர், அந்தந்த பகுதி அரசுப்பள்ளிகளை விடுமுறை நிறைவடையும் வரை, பாதுகாப்புடன் பராமரிக்க பொறுப்பேற்க வேண்டுமென, பள்ளி நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.அரசுப்பள்ளிகளில் குடிகாரர்கள் அசுத்தப்படுத்துவதை தவிர்க்க, உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம் என, பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்