புத்தக தின விழா
சிவகங்கை : சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் புத்தக தின விழா நடைபெற்றது. தமிழ் சங்க தலைவர் அன்புத்துரை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினர். எழுத்தாளர் ஈஸ்வரன் ஏற்புரை வழங்கினார். மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன், அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி, நுாலக தன்னார்வலர் ரமேஷ்கண்ணன் பங்கேற்றனர்.ஆசிரியர் சாஸ்தா சுந்தரம் நன்றி கூறினார்.