உள்ளூர் செய்திகள்

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.,) நிலையங்களில் 2024ம் ஆண்டிற்கு, மாவட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு 8 முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும், கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து, ஜூன் 7ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்