உள்ளூர் செய்திகள்

போலி நர்சிங் ஆவணம் சமர்ப்பித்த இருவர் கைது

சென்னை: சாந்தோமில் உள்ள தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அலுவலகத்தில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பதிவு செய்ய முயன்ற பீஹாரைச் சேர்ந்த இருவரை, மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை சாந்தோமில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அலுவலகம் உள்ளது. நர்சிங் படித்து முடித்தவர்கள், இந்த அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று, பீஹாரைச் சேர்ந்த ஷம்புகுமார், 38, ஜித்தேந்தர் குமார், 29, ஆகிய இருவரும், தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக ஆவணங்களை சமர்ப்பித்தனர்.அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் அளித்த புகாரின்படி, மேற்கண்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்