உள்ளூர் செய்திகள்

இன்று வேளாண் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு துவக்கம்

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தரப்பட்டியலில் ஆய்வு செய்யும் பணி காரணமாக, நேற்று துவங்கும் என டீன் வெங்கடேச பழனிசாமி தெரிவித்தார்.தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2024--2028 கல்வி ஆண்டிற்கான இளமறிவியல் மாணவர் சேர்க்கையில் பொது பிரிவினர், அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான இணையவழி கலந்தாய்வு, 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது.கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களின் விருப்பப்படி பட்டப் படிப்புகள், கல்லூரிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை இறுதியாக மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பங்கள், இடஒதுக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். கலந்தாய்வின்போது மாணவர்கள் கல்லூரி, பாடத் திட்டங்களை மாற்றம் செய்யவில்லை எனில், அவர்கள் இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது பூர்த்தி செய்த பாடப் பிரிவு, கல்லூரியே இடஒதுக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட், சீர்மரபினர் வகுப்பு மாணவர்கள் கலந்தாய்வுக் கட்டணமாக 3,000 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 1,800 ரூபாயும் செலுத்த வேண்டும். இவர்களில், 1.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு மட்டும் அவர்களின் கலந்தாய்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள், பொதுக் கலந்தாய்வு இடஒதுக்கீட்டின் கீழும் பரிசீலிக்கப்படும்.கலந்தாய்வில் கலந்துகொள்ள, மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். கலந்துகொள்ள தவறியவர்கள் மறுபரீசிலனை கிடையாது. இத்தகவல், https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களை, 94886 35077, 94864 25026 ஆகிய எண்களில் காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரையும், ugadmissionstnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், வாரநாட்களில் அறிந்து கொள்ளலாம்.கலந்தாய்வில் மாற்றம் ஏன்?தரவரிசைப் பட்டியல் வெளியீட்டின்போது, ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 22ம் தேதி நடைபெறும் என்று, பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி அறிவித்திருந்த நிலையில், கலந்தாய்வு இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலை டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், தரவரிசைப் பட்டியலில் ஆய்வுப் பணி காரணமாக, கலந்தாய்வுகோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தரப்பட்டியலில் ஆய்வு செய்யும் பணி காரணமாக, நேற்று துவங்கும் என டீன் வெங்கடேச பழனிசாமி தெரிவித்தார்.தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2024--2028 கல்வி ஆண்டிற்கான இளமறிவியல் மாணவர் சேர்க்கையில் பொது பிரிவினர், அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான இணையவழி கலந்தாய்வு, நேற்று முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது.கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களின் விருப்பப்படி பட்டப் படிப்புகள், கல்லூரிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை இறுதியாக மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பங்கள், இடஒதுக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். கலந்தாய்வின்போது மாணவர்கள் கல்லூரி, பாடத் திட்டங்களை மாற்றம் செய்யவில்லை எனில், அவர்கள் இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது பூர்த்தி செய்த பாடப் பிரிவு, கல்லூரியே இடஒதுக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட், சீர்மரபினர் வகுப்பு மாணவர்கள் கலந்தாய்வுக் கட்டணமாக 3,000 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 1,800 ரூபாயும் செலுத்த வேண்டும். இவர்களில், 1.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு மட்டும் அவர்களின் கலந்தாய்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள், பொதுக் கலந்தாய்வு இடஒதுக்கீட்டின் கீழும் பரிசீலிக்கப்படும்.கலந்தாய்வில் கலந்துகொள்ள, மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். கலந்துகொள்ள தவறியவர்கள் மறுபரீசிலனை கிடையாது. இத்தகவல், https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களை, 94886 35077, 94864 25026 ஆகிய எண்களில் காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரையும், ugadmissionstnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், வாரநாட்களில் அறிந்து கொள்ளலாம்.கலந்தாய்வில் மாற்றம் ஏன்?தரவரிசைப் பட்டியல் வெளியீட்டின்போது, ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 22ம் தேதி நடைபெறும் என்று, பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி அறிவித்திருந்த நிலையில், கலந்தாய்வு இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலை டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், தரவரிசைப் பட்டியலில் ஆய்வுப் பணி காரணமாக, கலந்தாய்வு இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்