உள்ளூர் செய்திகள்

பெரியார் பல்கலை பதிவாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி வேண்டும்

ஓமலுார்: ஏழு ஆண்டுகளாக நிரப்பப்படாத பதிவாளர், தேர்வாணையர் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும் என சேலம், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சேலம், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஏழு ஆண்டுகளாக நிரப்பப்படாத பதிவாளர், தேர்வாணையர் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும். உறுப்பு கல்லுாரி முதல்வர்களை, பல்கலையில் இருந்து விடுவிக்க வேண்டும். வரலாறு, கல்வியியல், இயற்பியல் துறை தலைவர்களை, அந்தந்த துறை ஆசிரியர்களால் நியமிக்க வேண்டும். ஆட்சிக்குழு தீர்மானத்தை, பல்கலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். தமிழக அரசு, நிரந்தர பதிவாளரை நியமிக்கும் வரை, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும்.கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற மற்றும் பல்கலை வக்கீல்களை மாற்றி, அரசு சார்பில் புதிய வக்கீல்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களின் பணி மேம்பாடு, பதவி உயர்வு தொடர்பாக நேர்காணல் நடத்தி, ஓராண்டாக முடிவு அறிவிக்காததால், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வாணையர் பொறுப்பில், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரே உள்ளதால் உடனே மாற்றி அனுபவமிக்க ஆசிரியரை அப்பொறுப்புக்கு நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்