பள்ளி மேலாண்மை குழு; புதிய நிர்வாகிகள் தேர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடந்தது.பொள்ளாச்சி, கோடங்கிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், தலைவர் தேர்வு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்து, மறு கட்டமைப்பு தேர்வு நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், வருகை பதிவு, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், உறுப்பினர் தேர்வுக்கான தகுதிகள், காலஅவகாசம் ஆகியவை தெளிவுப்படுத்தப்பட்டன.பள்ளி மேலாண்மை குழு தலைவராக சோபனா தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், புதிய உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளி ஆசிரியர் சத்தியா நன்றி கூறினார்.சிஞ்சுவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தேர்தல் நடந்தது. தலைவராக கன்னிகா, துணை தலைவராக கோகிலா தேர்வு செய்யப்பட்டார்.ஒருங்கிணைப்பாளராக தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, ஆசிரியர் பிரதிநிதி சசிகலா, பெற்றோர் உறுப்பினர்கள், 12 பேர், உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி துணை தலைவர் செல்வக்குமார், வார்டு உறுப்பினர் சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அரசு சாரா அமைப்பினர் ரங்கராஜன், சுய உதவிக்குழு உறுப்பினர் காளீஸ்வரி, முன்னாள் மாணவ உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சூர்யா, சவுந்தர்யா, அஜித் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.