மாநில பாடத்திட்டத்தால் முன்னேற்றம் சேப்பாக்கத்தில் சான்றோர்கள் பேச்சு
சென்னை: எவர்வின் பள்ளி குழுமத்தின் நிறுவனர் புருஷோத்தமன் எழுதிய கற்பிக்கும் இதயம் மற்றும் கலை - தி ஹாட் அண்டு ஆர்ட் ஆப் டீச்சிங் என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில், நேற்று நடந்தது.புத்தகத்தை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டு பேசியதாவது:என்.சி.எப்., எனும் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு குறித்தும், மாநில பாடத்திட்டம் குறித்தும், கல்வியாளர்கள் மேடையில் பேசியது பெருமையாக உள்ளது. நாங்கள் பேசுவதைவிட, கல்வியாளர்கள், அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், மாநில பாடத்திட்டம் குறித்து பெருமையாக எடுத்துச் சொல்லவேண்டும்.உங்களை போன்றோர் பதிலே, யார், யாரெல்லாம் நம்மை குறித்து பேசுகின்றனரோ அவர்களுக்கு பதிலாக இருக்கும்.எவர்வின் பள்ளி குழுமத்தின் நிறுவன மூத்த முதல்வர் புருஷோத்தமன் பேசுகையில், தமிழகத்தில் இருக்கும் மகத்தான டாக்டர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் 99 சதவீதம் பேர், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான்.பெற்றோர் பொறுமையோடு தொடர்ந்து ஊக்குவித்தால், எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் மாணவர்களால் ஜெயிக்க முடியும் என்பதை, நான் அனுபவத்தில் கற்ற விஷயம், என்றார்.