பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பகுதிநேர ஆசிரியர் பிரதீப் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சத்தியராஜ், வீரமணி, விஜயகுமார், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வட்டார பகுதி நேர ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்ததை அமல்படுத்தாததால் சென்னையில் போராட்டம் நடத்துவது.வரும் கல்வியாண்டில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர ஆசிரியர்களுக்கு வழங்கும் அனைத்து பலன்களையும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆசிரியர் சேவியர் நன்றி கூறினார்.