உள்ளூர் செய்திகள்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம்: ராமதாஸ்

சென்னை: கவுரவ விரிவுரையாளர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம் செய்வதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் 25,000 ரூபாய் மட்டுமே மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு பாடவேளைக்கு, 1,500 ரூபாய் வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக, 50,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என, பல்கலை மானியக் குழு, 2019ல் ஆணையிட்டது. இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், 25,000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்று, தமிழக கல்லுாரிக் கல்வி ஆணையரகம் அறிவித்துள்ளது.பல்கலை மானியக் குழுவால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி, கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு 50,000 ரூபாய் ஊதியம் வழங்க முடியாது என, ஆணையரகம் கூறியுள்ளது.இது, கவுரவ விரிவுரையாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். சமூக நீதியில் தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 50,000 வீதம் 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்