உள்ளூர் செய்திகள்

பெரியார் பல்கலையில் பி.டெக்., அன்புமணி எதிர்ப்பு

சென்னை: சேலம் பெரியார் பல்கலையில் பி.டெக் படிப்பு துவங்குவதை தடுக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:சேலம் பெரியார் பல்கலையில், பி.டெக் இம்மெர்சிவ் தொழில்நுட்பம், பி.எஸ்.சி., இம்மெர்சிவ் தொழில்நுட்பம் ஆகிய, புதிய பாடப்பிரிவுகளை தொழில் துறையினர் ஆதரவுடன் துவங்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து, தொழில் நிறுவனங்களின் விருப்பத்தை பல்கலை நிர்வாகம் கோரியுள்ளது. பொறியியல், தொழில்நுட்ப பாடங்களை நடத்த, பெரியார் பல்கலைக்கு அதிகாரம் இல்லாத நிலையில், இந்த படிப்புகளை நடத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை வீணடித்து விடக்கூடாது.அனைத்து வகையான, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின், ஓப்புதல் பெறப்பட வேண்டும். அதை பெறாமல், தொழில்நுட்ப படிப்புகளை, பெரியார் பல்கலை வழங்கினால், அந்த படிப்பு செல்லாது. லட்சக்கணக்கில் பணம் கட்டி, அந்த படிப்பை படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இந்த விவகாரத்தில், தமிழக அரசு தலையிட்டு, புதிய படிப்புகளை பெரியார் பல்கலை நடத்துவதை, தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்