டி.ஜே., அகாடமி ஆப் டிசைன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை: கோவையில் உள்ள ஜி.கே.டி. அறக்கட்டளையின் அங்கமான டி.ஜே., அகாடமி ஆப் டிசைன், சி.ஐ.ஐ., 'யங் இந்தியன்ஸ்' அமைப்புடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்நோக்கம், வடிவமைப்புத் துறையை ஒரு உற்சாகமான மற்றும் நிலையான எதிர்காலத் தொழில் வாய்ப்பாக மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். இதற்காக பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் மற்றும் அவுட்ரீச் திட்டங்களை இரு அமைப்புகளும் இணைந்து நடத்தவுள்ளன.இந்த ஒப்பந்தத்தில், டி.ஜே., வடிவமைப்பு அகாடமியின் டீன் வைத்தியநாதன் ராமசாமி மற்றும் சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் கோவை பிரிவின் தலைவர் நீல் கிகானி ஆகியோர் கையெழுத்திட்டனர். எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைமை அதிகாரி சவுந்தர்ராஜன், டி.ஜே. அகாடமி ஆப் டிசைன் மற்றும் யங் இந்தியன்ஸ் சி.ஐ.ஐ., கோவை பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்..