உள்ளூர் செய்திகள்

வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற அனுபவ பயிற்சி

எலச்சிபாளையம்: நாமக்கல்லில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், எலச்சிபாளையம் வட்டாரத்தில் கிராமப்புற அனுபவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.அதன்படி, எலச்சிபாளையம் வேளாண் துணை இயக்குனர் ஜெயமாலா, வேளாண்மை அலுவலர் அனிதா, உதவி வேளாண் அலுவலர் வெற்றிவேல் ஆகியோர் வழிகாட்டுதல்படி, நேற்று, கொன்னையார் கிராமத்திலுள்ள விவசாயி தங்கராசுவை சந்தித்து, எஸ்.டயிள்யூ.ஏ.எம்., திட்டம் மூலம் மானியத்தில் ரொட்டவேட்டர் வாங்கியது தெடர்பான தகவல்களை கேட்டறிந்து கொண்டனர்.எஸ்.டயிள்யூ.ஏ.எம்., என்பது, மத்திய அரசின் வேளாண் இயந்திர மயமாக்கல் துணை திட்டமாகும். இது விவசாயிகளுக்கு டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் போன்ற விவசாய கருவிகளை மானிய விலையில் வாங்கவும், வாடகை மையங்கள் அமைக்கவும் உதவுகிறது.மேலும், விவசாய இயந்திரங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்து விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நேரடியாக மானியத்தை பெறலாம். மேலும், டிராக்டர்கள் போன்றவற்றுக்கு, 50 சதவீதம் வரை மானியம் கிடைக்கும் என்பதை கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்