உள்ளூர் செய்திகள்

குழந்தை திருமணத்தை தடுக்க சிறப்பு விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம்: விருத்தாசலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா தலைமை தாங்கினார்.பி.டி.ஓ.,க்கள் கணேசன், லட்சுமி, வட்டார விரிவாக்க அலுவலர் ஜெயலலிதா, ஊர்நல அலுவலர் சித்ரா, மகளிர் அதிகார மைய மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சுகன்யா முன்னிலை வகித்தனர்.முகாமில், விருத்தாசலம், நல்லுார், மங்களூர் ஒன்றியங்களை சேர்ந்த திருமண பத்திரிக்கை அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் பங்கேற்றனர். அதில், 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். அதுபோன்ற திருமணங்களை தடுப்பது, சமூக நலத்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்