சாரதா கங்காதரன் கல்லுாரி ஜோஹோ கார்பரேஷனுடன் ஒப்பந்தம்
புதுச்சேரி: புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரி, ஜோஹோ கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் பரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாதனது.இந்த ஒப்பந்தத்தில் கல்லுாரி துணைத் தலைவர் பழனிராஜா, ஜோஹோ நிறுவன பிரதிநிதி பிரதீப் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர், தேர்வு கட்டுப்பாட்டாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஒப்பந்தம் மூலம் தொழில்கல்வி இணைப்பை மேம்படுத்தவும், கணக்கியல் மற்றும் வணிக மென்பொருள் பயன்பாடுகள் தொடர்பாக மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில் கொண்டுள்ளது.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிரதீப் ராதாகிருஷ்ணன் ஜோஹோ மென்பொருளின் அம்சங்கள், பயன்பாடுகள் மற்றும் அதன் நடைமுறை நன்மைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார். நிறுவனத்தின் வளர்ச்சி, சேவைகள் மற்றும் உலகளாவிய விரிவாக்கம் குறித்து பேசினார். இதன் மூலம் டிஜிட்டல் கணக்கியல் தீர்வுகள் மற்றும் மென்பொருள் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.