வங்கி கணக்கு விபரம் கொடுக்காதீங்க: மாணவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தொழில்நுட்ப கல்வி இயக்க கமிஷனர் விசாகன், அனைத்து இன்ஜி., பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தொழில்நுட்ப கல்வி இயக்க விதிகளின்படி, எந்த அலுவலர்களும், மாணவர்களை நேரடியாக தொடர்புகொண்டு, அவர்களின் வங்கி கணக்கு விபரங்களை கேட்க மாட்டார்கள். மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்கம் மற்றும் பிற நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம், தங்களின் வங்கி கணக்கு விபரங்கள், ஆதார் விபரங்கள் ஓ.டி.பி., போன்ற தகவல்களை பகிரக்கூடாது.இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து, மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது போன்ற மோசடி தகவல்கள் கிடைத்தால், கல்லூரி முதல்வர்கள், உடனடியாக, சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.