வீட்டில் இருந்தே எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., படிக்கலாம்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம் வாயிலாக, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி.,-கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆன்லைன் எம்.பி.ஏ., படிப்புகள் வழங்கப்படுகின்றன.பாடப்பிரிவுகள்:ரெகுலர் எம்.பி.ஏ., - மார்க்கெட்டிங், எச்.ஆர்., மார்க்கெட்டிங், டெக்னாலஜி, ஆபரேஷன்ஸ், பினான்சியல் சர்வீசஸ் மற்றும் ஜெல்த் சர்வீஸ் மேனேஜ்மெண்ட்ஆன்லைன் எம்.பி.ஏ., - பிசினஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் ஜெனரல் மேனேஜ்மென்ட்படிப்பு காலம்: 2 ஆண்டுகள் (4 செமஸ்டர்கள்).தகுதி: எம்.பி.ஏ., படிப்பில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., படிப்பில் சேர பி.சி.ஏ., அல்லது இளநிலை பட்டப்படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதன்மை பாடமாக படித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருப்பதோடு, இளநிலை பட்டப்படிப்பு அல்லது பள்ளி மேல்நிலை வகுப்புகளில் கணிதம் அல்லது புள்ளியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு: டான்செட்(எம்.பி.ஏ.,) அல்லது டி.இ.இ.டி., எனும் பிரத்யேக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆன்லைன் எம்.பி.ஏ., படிப்பில் சேர ஒ.இ.இ.டி., எழுதுவது அவசியம். அதேபோல், எம்.சி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற டான்செட்(எம்.சி.ஏ.,) அல்லது டி.இ.இ.டி., தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மாணவர்கள் https://cdefee.annauniv.edu/SIMS/index.php அல்லது https://onlinecde.annauniv.edu/login/signup.php எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 6, 2026.நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: மார்ச் 15, 2026.விபரங்களுக்கு: https://cde.annauniv.edu