உள்ளூர் செய்திகள்

கடல்சார் படிப்புகளில் சேர எழுதுங்கள் ஐ.எம்.யு.,-சி.இ.டி.,!

இந்தியாவில் கடல்சார் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய முக்கிய நுழைவுத் தேர்வு, 'இந்தியன் மேரிடைம் யுனிவர்சிட்டி - காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' (ஐ.எம்.யு.,-சி.இ.டி.,). மத்திய அரசின் கீழ் செயல்படும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வின் மூலம் இந்தியாவில் உள்ள ஐ.எம்.யு., வளாகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 18 கடல்சார் பயிற்சி நிறுவனங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர்க்கை பெற முடியும். இவைதவிர, நாடுமுழுவதிலும் 167 கல்வி நிறுவனங்களில் கடல்சார் படிப்புகள் வழங்கப்படுகின்றன.கடந்த 2008ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை, கொச்சி, கொல்கத்தா மும்பை துறைமுகம், நவி மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஆறு வளாகங்களில் செயல்படுகிறது. இளநிலை பட்டப்படிப்புகள்:பி.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்பி.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஷிப் பில்டிங் பி.டெக்., - மரைன் இன்ஜினியரிங்பி.எஸ்சி., - நாட்டிக்கல் சயின்ஸ்பி.பி.ஏ., - லாஜிஸ்டிக்ஸ், ரீடெயிலிங் மற்றும் இ-காமர்ஸ்பி.பி.ஏ., - மேரிடைம் லாஜிஸ்டிக்ஸ்முதுநிலை பட்டப்படிப்புகள்:எம்.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்எம்.டெக்., - டிரெட்ஜிங் மற்றும் ஹார்பர் இன்ஜினியரிங்எம்.டெக்., - என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்எம்.டெக்., - மரைன் டெக்னாலஜிஎம்.பி.ஏ., - இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்டேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்எம்.பி.ஏ., - போர்ட் மற்றும் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்டிப்ளமா படிப்புகள்: டி.என்.எஸ்., - டிப்ளமா இன் நாட்டிக்கல் சயின்ஸ்பி.ஜி.டி.எம்.இ., - போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மரைன் இன்ஜினியரிங்தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். குறிப்பாக, பி.டெக்., பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், உடல்தகுதியும், வயதுவரம்பும் உண்டு. பி.பி.ஏ., படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுதவேண்டிய அவசியம் இல்லை.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 24, 2026. பி.பி.ஏ., படிப்புகளுக்கு ஜூன் 17, 2026 நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: மே 24, 2026விபரங்களுக்கு: www.imu.edu.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்