உள்ளூர் செய்திகள்

எம்.ஏ., எம்.டெக்., படிப்புகள் சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., மற்றும் எம்.டெக்., பிரிவுகளில், நான்கு புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.உலகளவில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்ள, சென்னை ஐ.ஐ.டி., புதிதாக எம்.ஏ., முதுநிலை பட்டப்படிப்பு, எம்.டெக்., முதுநிலை பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்து உள்ளது.மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த பொதுக் கொள்கை எனும், எம்.ஏ., முதுநிலை பட்டப்படிப்பு; செமிகண்டக்டர் பொருள் தொழில்நுட்பத்தில் எம்.டெக்., முதுநிலை பட்டப்படிப்பு; இயந்திர இன்ஜினியரிங் எம்.டெக்., முதுநிலை பட்டப்படிப்பு; ரோபோட்டிக்ஸில் எம்.டெக்., முதுநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது:நாட்டின் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை ஐ.ஐ.டி., பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில், நான்கு புதிய முதுநிலை பட்டப்படிப்புகளை துவக்கி உள்ளோம். இத்துறைகளில், திறமையானவர்களை உருவாக்க வேண்டும் என்பதே, இதன் நோக்கம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்