ரெங்கேஸ்வரர் கல்வி நிறுவனம் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்: நாமக்கல் அடுத்த பொட்டி ரெட்டிப்பட்டியில், ரெங்கேஸ்வரர் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. வரும் ஏப்., 23ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முதல் முறை ஓட்டுப் போடுவோருக்கான, 'என் ஓட்டு என் உரிமை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்வி நிறுவன செயல் இயக்குனர் சுப்ரமணி தலைமை வகித்தார். சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி வட்டார மேலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆறுமுகம் பேரணியை துவக்கி வைத்தார்.கல்லுாரியில் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லுாரியை அடைந்தது. தொடர்ந்து, '18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும், ஓட்டுப்போடுவது அவசியம். நியாயமாகவும், நேர்மையாகவும் ஓட்டு போடுவோம். ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, மொழி ஆகியவற்றிற்கு உட்படாமல் ஓட்டுபோடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். பிசியோ மைய மருத்துவர் லோகேஷ் குமார், செவிலியர் கல்வி நிறுவன முதல்வர் நற்றமிழ், கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியன், நிர்வாக அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.