உள்ளூர் செய்திகள்

சிட்டி ஸ்போர்ட்ஸ் மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் 'லீக்' போட்டிகள் நடந்தன.வேடசந்துார் ஜாஹிர் பிராமிஸிங் லெவன் அணி 31.2 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி 87 ரன்கள் (ஆதித்யன் 3/11, ஊர்க்காலன் 3/8) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் ஏ.எம்., கிரிக்கெட் கிளப் அணி 10.3 ஓவர்களில் 88/1 ரன்கள் (முத்துக்காமாட்சி 41, தாமரைச்செல்வன் 36, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.திண்டுக்கல் ஸ்ரீவசந்தாஸ் ஸ்வீட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 47 ஓவர்களில் 194 ரன்கள் (பைராஜன் 25, தங்கப்பாண்டியன் 41, தமிழ்செல்வன் 38, சத்தியமூர்த்தி 3.44, கீர்த்திவாசன் 3/30) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பிளே பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 38 ஓவர்களில் 133 ரன்கள் (கணவாஇப்ரம்ஹா 36, ரித்தீஸ் 35, அசாரூதீன் 25, தங்கப்பாண்டியன் 4/28) எடுத்து 'ஆல் அவுட்' ஆகி வெற்றி பெற்றது.பழநி யுவராஜ் கிரிக்கெட் கிளப் அணி 25.4 ஓவர்களில் 141 ரன்கள் (பிரதீப் 46, கோபிநாத் 4/17) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் ஆரஞ்ச் சர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 18.5 ஓவர்களில் 143/6 ரன்கள் (தனபால் 40, கோபிநாத் 31) எடுத்து வெற்றி பெற்றது. பழநி சுப்ரமண்யா கிரிக்கெட் கிளப் அணி 18 ஓவர்களில் 79 ரன்கள் (விக்னேஷ் 5/17) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய எரியோடு ஸ்கில் கிரிக்கெட் கிளப் அணி 9.3 ஓவர்களில் 80/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.திண்டுக்கல் ஆல்ரவுண்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 23.5 ஓவர்களில் 168 ரன்கள் (பிரசாந்த் 39, யஸ்வந்த் 4/50) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய கொடைக்கானல் கொடை கிரிக்கெட் கிளப் அணி 24.3 ஓவர்களில் 135 ரன்கள் (மனோஜ்குமார் 49, வேளான்கன்னி 4/21, ஷாட்ரிக்) எடுத்து 'ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்