உள்ளூர் செய்திகள்

எமிஸ் தளத்தில் பிரச்னை; மதிப்பெண் பதிவதில் சிக்கல்

சென்னை: 'எமிஸ்' தளத்தில் ஏற்பட்டுள்ள, தொழில்நுட்ப கோளாறால், மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறை சார்ந்த தகவல்களை, 'டிஜிட்டல்' வடிவில் பாதுகாக்க, மாணவர்கள், ஆசிரியர்களின் விபரங்கள், 'எமிஸ்' எனும் இணையதளம் வாயிலாக சேமிக்கப்படுகிறது. இதில், மாணவர்களின் மதிப்பெண்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பகிரப்படுகின்றன.அவற்றை, பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து நிலை மற்றும் மாவட்ட அதிகாரிகள் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கின்றனர்.வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்குள் மாணவர்களின் மதிப்பெண்களை, 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றும்படி, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஆனால், கடந்த சில நாட்களாக சர்வர் பிரச்சனை காரணமாக, ஆசிரியர்கள் மதிப்பெண்களை பதிவேற்ற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்