உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கை

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வரும் கல்வியாண்டுக்கு, ஒரு லட்சத்து 12,711 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், 2026 - 27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.அரசு பள்ளிகளில், மாணவர்களை அதிகளவில் சேர்க்க, பள்ளிக்கல்வித்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.வரும் கல்வியாண்டுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2026 - 27ம் கல்வியாண்டில், ஒரு லட்சத்து 12,711 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.முதல் வகுப்பில் 97,737; இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை 8,178; மழலையர் வகுப்பில் 6,796 மாணவ, மாணவியர் சேர்ந்து உள்ளனர் என, தொடக்க கல்வித்துறை தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்