இளநிலை பாடப்பிரிவு சேர்க்கை விண்ணப்பிக்க அறிவுரை
ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை பாடப்பிரிவு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் பிராங்கிளின் ஜோஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஊட்டி அரசு கலை கல்லூரியில், 2026 - 27ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவில், சேர்க்கைக்காக விண்ணப்பிப்போர், www.tngasa.in என்ற இணைய முகவரியில், மே., 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.மேலும், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு, ஊட்டி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், கல்லூரி கலையரங்கத்தில் காலை, 10:30 மணி முதல் மாலை, 04:00 மணிவரை உதவி மையத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.