உள்ளூர் செய்திகள்

கல்லுாரி படிப்புக்கு விண்ணப்பிக்க பெரும்பாக்கத்தில் இலவச முகாம்

சென்னை: 'அரசு கல்லுாரிகளில் படிக்க விரும்பும் மாணவ மாணவியருக்கான இலவச விண்ணப்பிப்பு முகாம், வரும் 29ம் தேதி வரை, பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் நடக்கும்' என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்தது.பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 2016ல் துவங்கப்பட்டது. இங்கு, 1,300 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.நடப்பு 2026 - 27ம் ஆண்டுக்கான சேர்க்கையில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பொது, பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட இளநிலை பாடப் பிரிவுகள் உள்ளன. எம்.ஏ., தமிழ், எம்.காம்., எம்.எஸ்.சி., கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகளும் உள்ளன.இப்பாடப் பிரிவுகளில் சேர, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இணைய சேவை மையங்களில் 200 முதல் 1,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். மாணவர்கள் பயனடைய வசதியாக, கல்லுாரி வளாகத்திலேயே இலவசமாக விண்ணப்பிக்க சிறப்பு முகாம் துவங்கப்பட்டுள்ளது.இது குறித்து, கல்லுாரி முதல்வர் உமா மகேஸ்வரி கூறியதாவது:ஒன்பது பாடப் பிரிவுகளில், 450 இருக்கைகள் உள்ளன. மாணவ மாணவியர் விண்ணப்பிக்க உதவும் வகையில், வரும் 29ம் தேதி வரை, இலவச ஆன்லைன் விண்ணப்பிப்பு முகாம் நடைபெறும்.விண்ணப்ப கட்டணமாக, பொது பிரிவினர் 50 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 2 ரூபாயும் செலுத்த வேண்டும். அதோடு, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் எடுத்து வர வேண்டும்.மேலும், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் போன் எண் இருக்க வேண்டும். ஒரு நபர், ஐந்து அரசு கல்லுாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். முகாம் காலை 10:00 முதல் மாலை 05:00 மணி வரை செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்