உள்ளூர் செய்திகள்

புதிய ஜவுளி தொழில் கொள்கை தொழிற்துறையினருடன் ஆலோசனை

திருப்பூர்: புதிய ஜவுளி தொழில் கொள்கையை உருவாக்கும் முயற்சியாக, மத்திய ஜவுளித்துறை ஆணையர், தமிழக தொழிற்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.மத்திய ஜவுளித்துறை ஆணையம், புதிய ஜவுளி கொள்கையை உருவாக்க உத்தேசித்துள்ளது.இது தொடர்பாக, தமிழகத்தில் இயங்கும் முன்னணி தொழில் அமைப்பு பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.மத்திய ஜவுளித்துறை ஆணையர் விருந்தா மனோகர் தேசாய், சென்னையில் நேற்று, தொழில் அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, மேற்காசிய போர் சூழலால் உருவாகும் சவால்கள், புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் வரும் வர்த்தக வாய்ப்புகள் என, புதிய மாற்றங்களை எதிர்கொள்ள தொழில்துறையினர் தயாராக வேண்டும் என வலியுறுத்தினார்.இந்நிலையில், தமிழக ஜவுளித்துறை ஆணையருடன் இணைந்து, கோவை மற்றும் திருப்பூரில், தொழில் அமைப்பு பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்