தொழில்முனைவோர் புத்தாக்க சான்றிதழ் கல்வி சேர்க்கைக்கு அழைப்பு
கடலுார்: தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்வி சேர்க்கைக்கு தொழில்முனைவோராக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்விக்கான வகுப்பு அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து, இரு ஆண்டுகள் நடத்தப்படவுள்ளது.தற்போது 3ம் ஆண்டாக, ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்விக்கான சேர்க்கை துவங்கி உள்ளது.இந்த சான்றிதழ் படிப்பிற்கு பட்டதாரிகள் அல்லது தொழில்துறை பயிற்சி முடித்து சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களாகவும், 21 முதல் 40 வயது வரை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.மேலும், ஜூன் 15, 2026 முதல், ஓராண்டு தொழில் முனைவோர் புத்தாக்க சான்றிதழ் வகுப்பு தொடங்கப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பிற்கு https://www.editn.in/Web-One-Year-Registration என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இந்த சான்றிதழ் படிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.