உள்ளூர் செய்திகள்

முதல்வர் விஜயுடன் இந்திய மாணவர் சங்கத்தினர் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, முதல்வர் விஜயை சந்தித்த இந்திய மாணவர் சங்கத்தினர், 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.இந்திய மாணவர் சங்க தலைவர் மிருதுளா, மாநில செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் அளித்த மனு:அனைத்து கல்வி நிலையங்களிலும், மாணவர் தேர்தல் நடத்த வேண்டும். சட்டசபையில், 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியருக்கான உணவுப்படியை உயர்த்த வேண்டும்.பல்கலைகளில் துணை வேந்தர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். பல்கலை வேந்தராக முதல்வர் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்