பண்ணாரி அம்மன் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை: பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி (பி.ஐ.டி.,) முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், 1997 - 2001ம் ஆண்டு படித்த மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நடந்தது. இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த 152 மாணவர்கள் பங்கேற்றனர்.பி.ஐ.டி., கல்லுாரித் தலைவர் பாலசுப்பிரமணியம், கல்வி நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் வளர்ச்சியையும் வலுப்படுத்துவதில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லுாரிகால இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை வடிவமைப்பதில் கல்லுாரி வழங்கிய பங்களிப்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசினர். தொடர்ந்து, முன்னாள் மாணவர்களின் 'அலுமினி இயர்புக்' வெளியிடப்பட்டது.