பள்ளியில் கணித கண்காட்சி மாணவர் படைப்புகள் அசத்தல்
உடுமலை: உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ராமானுஜர் கணித மன்றம் சார்பில், கண்காட்சி நடத்தப்பட்டது.ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, கண்காட்சியை பார்வையிட்டார். பள்ளிச்செயலர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மாலா வரவேற்றார்.முக்கோணவியல் வாயிலாக கட்டடத்தின் உயரத்தை அளவிடுதல், 15ம் நுாற்றாண்டைச்சேர்ந்த காரிநாயனார் எழுதிய கணக்கதிகாரம் வாயிலாக பலாப்பழ சுளைகளை கணக்கிடுதல், கணித வடிவங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.